search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்"

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் அந்தந்த துறைகளின் சார்பில் பதிலளித்திருந்தனர்.

    கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-

    கடலோர கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி வாக்காளர் எண்ணிக்கையை முறைப் படுத்த வேண்டும், கன்னியாகுமரி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை உள்ள ஏ.வி.எம். சானலை தூர்வார வேண் டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்ப டாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே அதிகாரிகள் வந்து கூறுகி றார்கள்.

    பெரிய காடு மீன வர் கிராமத்தில் போடப் பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்து தர வேண்டும். பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம் கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அதிகாரிகள் பேசி யதாவது:-

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை போடப்பட்டு இன்னும் ஒப்பந்த முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த ஒரு முறையான உத்தரவும் இன்னும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வரப்பெற்றால் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×